Monday 16 February 2015

பேஸ்புக்கினால் நீங்கள் பெற்ற , இழந்த மற்றும் சந்தித்த மாற்றங்கள...

1. இனி உங்கள் பிறந்த
நாளுக்கு வாழ்த்து அட்டை யாருமே
அனுப்ப மாட்டார்கள்..
உங்களுக்கு பிடித்தமானவர்கள்
உங்களுக்காக சிறப்பு நேரம்
எடுத்து  வாழ்த்து அட்டை யாருமே
அனுப்ப மாட்டார்கள். போகிற
போக்கில் ஒரு வாழ்த்து பேஸ்புக்கில்
அவ்ளோ தான்

2. குறிப்பாக நீங்கள் பேஸ்புக்கில்
பார்க்கவில்லை எனில் உங்கள்
நெருங்கிய நண்பருக்கு முதலில்
நீங்கள் வாழ்த்து சொல்ல முடியாது.
அனைவரும் சொன்ன பிறகு நீங்கள்
சொல்ல வேண்டிவரும். அதுவும்
பெண் தோழி என்றால்
விளைவுகளுக்கு நீங்கள் தான்
பொறுப்பு

3. மற்றவர்கள் தாங்கள் இருந்த
இனிமையான
நிகழ்வுகளை பதிவு செய்யும்
போது உங்களுக்கு இயல்பாகவே நாம்
வாழ்கையை சந்தோஷமாக
வாழவில்லை என தோன்றலாம்

4. உங்கள் நண்பர்கள்
போட்டோ போட்டதில் நீங்கள்
இல்லை என்றால் அவர்கள்
உங்களை கண்டுகொள்ளவில்லை என்று
தோன்றலாம்

5. உங்கள் நண்பர் போடும் மொக்க
ஸ்டேடஸ்
உங்களை வெறுப்பேத்தி அவரிடம்
உங்களுக்கு இருக்கும் உறவில்
விரிசல் விழலாம்.

6. உங்கள் முடி, கை, கால் ,
செருப்பு என அனைத்தும் அவர்கள்
காட்டும் விளம்பரங்கள் மூலம் நாம்
வாங்குகிறோம் என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்.

7. இறுதியாக நேரம். உங்கள்
நேரத்தை அதிகமாக
எடுத்துகொள்கிறது பேஸ்புக்.
நீங்கள் நிச்சயம்
இதை கடந்து வந்துருக்கலாம்.

0 comments:

Post a Comment